ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான இறுதி போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அரங்கேற உள்ளது. இந்த இறுதி போட்டியில் பலம் வாய்ந்த அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில் CSK அணி முதல் பிளே ஆப் சுற்றில் GT யை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேறியது. அதே போன்று GT அணியானது பிளே ஆப்பின் 2வது தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது. இதனால், மீண்டும் CSK அணியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே CSK அணியிடம் வீழ்ந்த GT அணி இந்த இறுதிப் போட்டியில் பதிலடி கொடுத்து தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ச்சா.., அன்னைக்கு கல்யாணமே பன்னிருக்க கூடாது.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகை தீபிகா குமுறல்!!
ஆனால் CSK அணி இந்த ஆண்டு எப்படியாவது 5வது முறையாக ஐபிஎல் பட்டத்தை வெல்ல வேண்டும் என போராடி வருகின்றனர். இதனால் நாளை நடைபெறும் அனல் பறக்கும் ஆட்டத்தில் எந்த அணி ஐபிஎல் பட்டத்தை சொந்தமாக்கி கொள்வார்கள் என பார்க்கலாம். இரு அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:
ஆர் டி கெய்க்வாட் , டெவோன் கான்வே , ஏடி ராயுடு , அஜிங்க்யா ரஹானே , எம்எம் அலி , ஆர் ஏ ஜடேஜா , எஸ் துபே , எம் எஸ் தோனி(சி) , டி எல் சாஹர் , எம் தீக்ஷனா, டியு தேஷ்பாண்டே.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:
சுப்மன் கில் , ஹர்திக் பாண்டியா(சி) , சாய் சுதர்சன் , டேவிட் மில்லர், விஜய் சங்கர் , ஆர் டெவாடியா , விருத்திமான் சாஹா (வி.கே.) ரஷித் கான் , எம் ஷமி , நூர் அகமது, எம்.எம்.சர்மா.