2022-2023 ஆம் ஆண்டிற்கான 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்வில் சிலர் காலந்துகொள்ளாத நிலையில் மறுபடியும் அவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.
மேலும் தேர்வு முடிந்து மாணவர்கள் அனைவரும் விடுமுறையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் தேர்வு முடிவுகள் எப்பொழுது வரும் என்ற ஆர்வத்துடனும் மாணவர்கள் உள்ளனர்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ரிசல்ட் வெளிவர காலதாமதமாகும் என்றும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது https://tnresults.nic.in/ இணையதளத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ரிசல்ட் மே 8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிக்கை வெளியாகியுள்ளது.