Saturday, May 18, 2024

ஜம்மு காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டை – 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை!!

Must Read

ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் முக்கிய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் ஊடுருவல்:

கொரோனா காரணமாக மத்திய அரசு பொது முடக்கத்தை அமல் படுத்தியுள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பயங்கரவாதிகள் எல்லை பகுதிகளில் அதிகமாக உள்நுழைந்தனர். இதனால் மக்கள் மத்தியில் அச்சம் இருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

terrorist attack in JK
terrorist attack in JK

மக்களின் பயத்தை போகும் விதமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இப்படியான நிலையில் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள குல்ச்சோகர் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்கள் கிடைத்தது. அங்கு விரைந்த படையினர், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

திடீர் தாக்குதல்:

இவர்களுடன், அப்பகுதி காவலர்களும் இணைத்து கொண்டனர். அப்போது, இவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சுட்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், சுதாரித்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். அதில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

புதிய தோற்றத்தில் “தல” தோனி – வியப்பில் ரசிகர்கள்..!!

Hizbul Mujahideen's commander Masood was killed
Hizbul Mujahideen’s commander Masood was killed

இந்த மூவரில் ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி மசூத் என்றும் மற்ற இருவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்து உள்ளது. மசூத் மேல் காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்ணை கற்பழித்த வழக்கு ஒன்று உள்ளது. அதனால் தன இவர் தலைமறைவாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -