கோவையில் 16 வயது சிறுவனை தாக்கிய போலீசார் – பதிலளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்..!

0

கோவையில் 16 வயது சிறுவனை எஸ்.ஐ தாக்கிய விவகாரத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

16 வயது சிறுவனை எஸ்.ஐ விவகாரம்..!

கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டி உணவு கடை நடத்தி வந்தவர் வேல்மயில். இவர் கடந்த 17ஆம் தேதி தனது மனைவி மற்றும் மகனுடன் இரவு உணவு கடை நடத்தி வந்தனர். அப்போது ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செல்லமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்நிலையில் உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகன சாவியை பிடுங்கி கொண்ட மாணவர் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த செல்லமணி அந்தச் சிறுவனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அருகில் இருந்த மற்றொரு போலீஸ் அதிகாரியும் சிறுவனை லத்தியால் தாக்கியுள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த சிறுவனின் பெற்றோர் போலீஸிடமிருந்து தம் மகனை பாதுகாக்க கதறி அழுதனர். இதுதொடர்பாக சிறுவனின் தந்தை மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இந்த வீடியோ வெளியானதால் போலீஸாருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தை ஆணைய உறுப்பினர் மோகன்தாஸ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்..!

16 வயது சிறுவனை போலீஸ் தாக்கிய விவகாரம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உங்களது பதிலை தபால் மூலம் தவறாமல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் இதில் ஏதேனும் தவறு நடந்தால் ஆணையம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here