விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிந்த சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் கவின். இவர் தனது எதார்த்தமான நகைச்சுவை நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை தன்வசப்படுத்தி வந்தார். பிறகு பீட்சா, சத்ரியன், இன்று நேற்று நாளை போன்ற படங்களில் முன்னணி ரோல்களில் நடித்து வந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதை தொடர்ந்து “நட்புனா என்னானு தெரியுமா” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். மேலும், சமீபத்தில் வெளியான லிப்ட் என்ற த்ரில்லர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தற்போது ‘ஊர் குருவி’ என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ”டாடா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை ”ஒலிம்பியா மூவிஸ்” என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் போன்ற முக்கிய பிரபலங்கள் இவருடன் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் காட்சிகள் இணையத்தில் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர் மத்தியில் அதிகரித்து வருகிறது.