இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்வதே மிகப்பெரிய வெற்றி”…, ஆஸ்திரேலிய நட்சத்திரம் ஓபன் டாக்!!

0
இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்வதே மிகப்பெரிய வெற்றி
இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்வதே மிகப்பெரிய வெற்றி"..., ஆஸ்திரேலிய நட்சத்திரம் ஓபன் டாக்!!

பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு தயாராகி வரும் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடருடன் ஒப்பிட்டு, இந்தியாவுக்கு எதிரான தொடர் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்:

இந்திய அணி எதிர்கொள்ள இருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு, 2 காரணங்கள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதில் முதல் காரணம், இந்த தொடரை இந்திய அணி வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மற்றொன்று, 2016-2017, 2018-2019 மற்றும் 2020-2021 என தொடர்ந்து மூன்று முறை இந்திய அணியே இந்த கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. இதனை தக்க வைத்துக் கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணியானது, இந்த தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாதனையை முறியடிக்க காத்திருக்கும் இந்திய பவுலர்…, இன்னும் 7 விக்கெட் தான் வேணுமா??

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஆஷஸ் தொடரை விட, இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டிராபி மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால், அதில் பெரும் வெற்றி ஆஷஸ் தொடரின் வெற்றியை விட மிக பெரியது என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here