லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் ப்ரோமோ வீடியோ குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 67:
தற்போது விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆன நிலையில், செகண்ட் செட்யூல்-காக படக்குழுவினர் தனி விமானம் ஒன்றில் காஷ்மீருக்கு பறந்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் புதிதாக டான்ஸ் மாஸ்டர் சாண்டி இணைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக தளபதி 67 படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மொத்த கோலிவுட் உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தளபதி 67 படத்தின் ப்ரோமோ வீடியோ நாளை பிப்ரவரி 3ம் தேதி வெளியாக இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் தீயாய் பரவி வருகிறது. மேலும் படத்தின் டைட்டிலும் ப்ரோமோவில் வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தளபதி 67 படத்தின் டைட்டில் நாளை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் ரத்தம் தெறிக்க தெறிக்க இருக்கும் விஜயின் முகத்தை கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளனர்.