சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பாராத அளவிற்கு பல ட்விஸ்டுகளோடு ஒளிபரப்பாகி வருகிறது கண்ணான கண்ணே சீரியல். இந்த சீரியல் தன் அப்பாவின் பாசத்திற்கு ஏங்கி தவிக்கும் ஒரு பெண் குழந்தையின் உணர்வு பூர்வமான போராட்டத்தை மிகவும் தத்ரூபமாக வெளிப்படுத்தி வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இந்த சீரியலின் ஆட்டத்தை இன்னும் சூடுபிடிக்க வைக்க ஒரு தரமான கேரக்டர் நியூ என்றி கொடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகிய ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியலில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ”ஸ்வாதி தாரா” தான் இனி இந்த சீரியலில் புதிதாக அறிமுகமாக உள்ளார்.
மேலும் இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் இந்த சீரியலுக்கு என்ட்ரி கொடுப்பதன் மூலம் இனி இந்த ‘கண்ணான கண்ணே’ சீரியல் TRB லெவல் அதிகரிக்கும் வகையில் இவரின் நடிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.