விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் யாஷிகா. இவர் தனது கெரியரை மாடலாக தொடங்கி பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்ததன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர் 2018 ஆம் ஆண்டு “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்து யாஷிகா ஆர்மியை இவரின் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.
மேலும் இவர் தன் ரசிகர்களுக்கு தன்னை பற்றி அப்டேட்டுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவரின் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த இவரின் ரசிகர்கள் புகைப்படத்திற்கு லைக் கமெண்ட் செய்து வருகின்றனர்.