வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் நியூஸ்., மெசேஜ் மற்றும் வீடியோ காலில் இப்படி ஒரு அப்டேட்டா? மெட்டா அதிரடி!!

0
வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் நியூஸ்., மெசேஜ் மற்றும் வீடியோ காலில் இப்படி ஒரு அப்டேட்டா? மெட்டா அதிரடி!!
வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் நியூஸ்., மெசேஜ் மற்றும் வீடியோ காலில் இப்படி ஒரு அப்டேட்டா? மெட்டா அதிரடி!!

உலகெங்கும் உள்ள அதிக மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் தளத்தில், மெசேஜ் மற்றும் வீடியோ காலில் குறிப்பிடத் தகுந்த பல்வேறு அப்டேட்களை மெட்டா அதிரடியாக வெளியிட்டுள்ளது.

மெட்டா அதிரடி :

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களில் ஒன்று வாட்ஸ்அப். அந்த வகையில் சமீபத்தில் ஸ்டேட்டஸ் மற்றும் மெசேஜ்களுக்கு ரியாக்ட் செய்ய 7 எமோஜிகள் இருக்கும் நிலையில் மேலும் 21 எமோஜிகளை சேர்ப்பதாக மெட்டா அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது, நாம் ஒருவருக்கு அனுப்ப விரும்பும் வீடியோ அல்லது போட்டோவை ஒருமுறை மட்டும் பார்க்குமாறு செட் செய்து அனுப்பும் வசதி சமீபத்தில் கொண்டு வரப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இதனைப் போலவே, view-once text messages என்ற அப்டேட் மூலம் மெசேஜ்களையும் ஒரு முறை மட்டுமே பார்க்கும் வசதியுடன் அனுப்பும் அப்டேட் கொண்டு வரப்பட உள்ளது. முதலில் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.22.25.20 என்ற பயனர்களுக்கு மட்டுமே இது வழங்கப்பட இருந்த நிலையில் தற்போது, பீட்டா வெர்ஷனிலும் சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்., சென்னை வானிலை ஆய்வு மையம் பகீர்!!

இதுபோக வீடியோ கால், பேசும் போது அந்த Pageலிருந்து வேறு பக்கத்திற்கோ அல்லது வேறு ஆப்-க்கோ செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இதை மாற்றும் விதமாக பிக்ட்சர் – இன் – பிக்ட்சர் என்ற புது வசதி மூலம் ஐபோன் பயனர்களுக்கு whatsapp காலில் இருந்து கொண்டு வேறு செயலிகளுக்கு செல்லும் அப்டேட்டை வாட்ஸ்அப் வழங்க உள்ளது. இதனால் இதன் பயனர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here