விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 படத்தை குறித்து முக்கிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தளபதி 67:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கருதப்படுவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் செகண்ட் சிங்கிள் சாங் விரைவில் வெளியாக இருக்கிறது .
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். மேலும் இப்படத்தில் விஜய்க்கு 5 வில்லன்கள் என்று அவர் கேங்ஸ்டராக நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.
4 மாதத்துக்குள் ஊத்தி மூடப்படும் முன்னணி சேனலின் டாப் ஹிட் சீரியல் – ரசிகர்கள் ஷாக்!!
அதாவது லோகேஷ் இயக்கும் தளபதி 67 படம் ஆங்கில படத்தோட டப்பிங் என்று கூறப்படுகிறது. கடந்த 2005ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி ஹிட் அடித்த ” A History of Violence” படத்தை ரீமேக் என்று கூறப்படுகிறது. மேலும் படத்தின் உரிமையை லோகேஷ் முன்னாடியே வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை அறிந்த நெட்டிசன்கள் அட்லீ போல் நீங்களும் இப்படி இறங்கிட்டீங்களா என்று கேலி செய்து வருகின்றனர்.