கின்னஸ் சாதனை படைத்த ஐபிஎல்…, ரசிகர்களால் கிடைத்த பெருமை!!

0
கின்னஸ் சாதனை படைத்த ஐபிஎல்..., ரசிகர்களால் கிடைத்த பெருமை!!
கின்னஸ் சாதனை படைத்த ஐபிஎல்..., ரசிகர்களால் கிடைத்த பெருமை!!

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியால், பிசிசிஐயானது கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது.

கின்னஸ் சாதனை:

நடப்பு ஆண்டு நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐபிஎல்) தொடரில், முதன் முறையாக ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. இறுதி போட்டி வரை முன்னேறி இருந்த, குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர்த்து மோதியது. இதில், அறிமுகமான முதல் தொடரிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி பட்டத்தை தட்டி சென்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போட்டியானது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதாவது, இந்த போட்டியை காண குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் 1,01,566 ரசிகர்கள் திரண்டு இருந்தனர். அதிக ரசிகர்கள் மைதானத்தில் கூடி பார்த்த இந்த போட்டிக்காக, பிசிசிஐக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஓவரில் 43 ரன்கள்…, உலக சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்!!

இந்த சாதனை குறித்து, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது டிவீட்டர் பக்கத்தில், ரசிகர்களின் ஆதரவிற்கும், கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்திற்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு பெருமையான தருணம் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் 1,00,024 ரசிகர்கள் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here