நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் பாடல் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
துணிவு படம்:
தமிழ் சினிமா துறையில் எண்ணற்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் அஜித். தற்போது இயக்குனர் வினோத் படைப்பில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது இவர்களுடைய மூன்றாவது கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயோ, ப்ளீஸ் கொல்லாதீங்க.,,ஜீன்ஸில் ஜிக்குனு போஸ் கொடுத்த ஷிவானி.., தெறிக்கவிடும் போஸ்கள்!!
இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் வினோத் இந்த படத்தை கண்ணும் கருத்துமாய் எடுத்து வருகிறார். இந்நிலையில் துணிவு படம் குறித்து ஒரு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது இப்படத்தில் “சில்லா சில்லா” என்ற பாடல் இருப்பதாக சமீபத்தில் சில செய்திகள் கசிந்தன. தற்போது இந்த பாடலின் ஷூட்டிங் இன்று துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்பாடல் நடிகர் அஜித்தின் ஓப்பனிங் சாங் என்பதால் அவர் கலந்து கொண்டு டான்ஸ் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்பாடலை ராக் ஸ்டார் அனிருத் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. அப்ப தியேட்டர்ல ஒரு சம்பவம் இருக்கு..