தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக வீராங்கனை அர்ச்சனா தடாலடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
தமிழக வீராங்கனை அர்ச்சனா
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் 36 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஹிமா தாஸ், அர்ச்சனா சுசீந்திரன் உள்ளிட்ட ஏராளமான வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் முன்னணி வீராங்கனை ஹிமா தாமசை சமாளிப்பதற்கு சக வீராங்கனைகளுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனாலும் அந்த சிரமத்தை எல்லாம் தாண்டி தமிழக வீராங்கனை அர்ச்சனா, ஹிமா தாமசை அசால்ட்டாக பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். அதன்படி அர்ச்சனா 23.06 வினாடிகளில் 200 மீட்டர்களை எளிதாக கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
ரிவ்யூ கேட்க மறுத்த ரோஹித்.., கடுப்பான ரிஷப் பந்த்.., வெளியாகிய சுவாரஸ்ய வீடியோ!!
இதன் மூலம் முன்னணி வீராங்கனையான ஹிமா தாஸ் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். இந்த போட்டிகளின் மூலம் தமிழக அணிக்கு 14 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் உட்பட மொத்தம் 46 பதக்கம் கிடைத்தது. அதன்படி பதக்க பட்டியலில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது.