ரேஷன் கடைகளில் இலவச அரிசி திட்டம்.,, அரசுக்கு இவ்வளவு கோடி செலவா?

0
ரேஷன் கடைகளில் இலவச அரிசி திட்டம்.,, அரசுக்கு இவ்வளவு கோடி செலவா?
ரேஷன் கடைகளில் இலவச அரிசி திட்டம்.,, அரசுக்கு இவ்வளவு கோடி செலவா?

கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட பிரதமர் மோடி கரீப் கல்யாண் யோஜனா திட்டம் வரும் டிசம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தால் ஏற்படும் செலவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கரீப் கல்யாண் யோஜனா

மத்திய அரசு, ஏழை எளிய மக்களின் நலன் கருதி ரேஷன் திட்டம் வாயிலாக மலிவான விலையில் உணவு பொருட்களை வழங்கி வருகிறது.இதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது, ஊரடங்கு காலத்தில் ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய ‘பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. ஏற்கனவே தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களுடன் இது கூடுதலாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் 2022 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் இதுவரை 7 கட்டங்களாக செயல்பாட்டில் உள்ளது.

தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பது இதற்கு தானா?? அமைச்சர் பரபரப்பு பேட்டி!!

இதன் அடிப்படையில் முதல் கட்டம் முதல் 6வது கட்டம் வரை இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த செலவு ரூ.3.45 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து 7 வது கட்டத்தில் 12.22 மில்லியன் டன் கோதுமை மற்றும் அரிசி விநியோகிக்க பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.44,762 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு, தற்போது 3.91 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here