காதலில்  விழுந்தாரா ஈரமான  ரோஜாவே  கேபி.., அதுவும்  இந்த  பிரபலத்துடனா?? அவர்களே  வெளியிட்ட பதிவு!!

0
காதலில்  விழுந்தாரா ஈரமான  ரோஜாவே  கேபி.., அதுவும்  இந்த  பிரபலத்துடனா?? அவர்களே  வெளியிட்ட பதிவு!!
காதலில்  விழுந்தாரா ஈரமான  ரோஜாவே  கேபி.., அதுவும்  இந்த  பிரபலத்துடனா?? அவர்களே  வெளியிட்ட பதிவு!!

பிக் பாஸ் சீசன் 4 ல் கலந்து கொண்ட ஆஜித் மற்றும் கேப்ரியல்லா இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அதற்கு ஆஜித் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஆஜித் – கேப்ரியல்லா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் கேப்ரியல்லா. அதன் பிறகு சென்னையில் ஒரு நாள், சமுத்திரக்கனி நடித்த அப்பா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானார் .இப்படி சிறு சிறு பாத்திரங்களில் நடித்த இவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பிறகு தான் இவரின் மார்க்கெட் அதிகரிக்க தொடங்கியது. அதன்படி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவருக்கு ஈரமான ரோஜாவே சீரியலில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலின் மூலம் இவர் தற்போது ரசிகர்களிடையே பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் இவர் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க தயாராகும் பாரதி.., வெட்டவெளிச்சமாகும் வெண்பாவின் உண்மை முகம்!!

அதாவது இவருடன் இணைந்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆஜித் கலந்து கொண்டார். அதன் மூலம் இவர்கள் இருவரும் மிகவும் குளோஸ் ஆனார்கள். அதுமட்டுமல்லாமல் இருவரும் ஒன்றாக இணைந்து பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் நடனம் ஆடினர். மேலும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டான்ஸ் ஆடி வீடியோவையும் பதிவிட்டனர். எனவே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சில வதந்திகள் பரவியது.

இந்நிலையில் ஆஜித்திடம், கேப்ரியல்லாவை லவ் பண்றீங்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆஜித், நாங்கள் இருவரும் என்னைக்கும் அப்படி நினைத்தது கிடையாது. மேலும் அண்ணன், தங்கையாக தான் பழகி வருகிறோம் என கூறினார். இதை கேட்ட அனைவரும் உங்களுக்குள்ள இப்படி ஒரு உறவா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here