தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பது இதற்கு தானா?? அமைச்சர் பரபரப்பு பேட்டி!!

0
தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பது இதற்கு தானா?? அமைச்சர் பரபரப்பு பேட்டி!!

உள்ளூர் மொழி, தாய்மொழிக்கு முக்கியத்துவம் தந்தும் அரசியல் காரணங்களுக்காகத்தான் தேசியக் கல்விக்கொள்கையை எதிர்க்கிறார்கள் என்றும் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் கூறியுள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கை:

அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வந்த மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தீவிரமாக பணிகளை மேற்கொண்டுள்ளோம். மேலும் சமூக முன்னேற்றத்திற்கும், அடுத்த தலைமுறையை உயர்த்தவும் கல்விதான் முக்கிய பங்கு வகிக்கும். இதையடுத்து தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளூர்மொழி, தாய்மொழிக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த கல்வி கொள்கை அமலுக்கு வந்தால், அரசு பள்ளிகளில் தொடக்க வகுப்புகள் வந்து விடும். இதனால் மாணவர்கள் அனைத்து விதமான கல்வி அறிவையும் பள்ளிகளில் பெற முடியும். இந்த கல்விக்கொள்கையை உலகத் தரத்துக்கு இணையாக மேம்படுத்தி அடுத்த நூற்றாண்டில் இளையோருக்கு உரிய முக்கியத்துவம் தரும். கல்வியில் குழந்தைகள் தேவையை அறிந்து கற்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் இனி இவங்களுக்கு மட்டும் தான் இந்த சான்றிதழ் – அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!!

அதற்காகத்தான் தேசிய கல்வி கொள்கையில் பல்வேறு நெகிழ்வு தன்மை உருவாக்கி வருகின்றனர். குழந்தைகள் எதை கற்க விரும்புகிறார்களோ அதனை தான் தேசிய கல்வி கொள்கையில் நாம் முன்னேடுத்துள்ளோம். ஆனால், தேசிய கல்விக்கொள்கையை அரசியல் காரணங்களை முன் வைத்து தான் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

மேலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பிராந்தியங்களிலும் அரசு பள்ளிகளில் cbse பாடத் திட்டத்தை அமல்படுத்த அரசு தரப்பில் கோரிக்கை வைத்தது, மிகவும் பாராட்டுக்குரியது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் பரிசீலித்து சீக்கிரம் முடிவை தெரிவிக்கும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here