தமிழகத்தில் இனி இவங்களுக்கு மட்டும் தான் இந்த சான்றிதழ் – அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!!

0
தமிழகத்தில் இனி இவங்களுக்கு மட்டும் தான் இந்த சான்றிதழ் - அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் இனி இவங்களுக்கு மட்டும் தான் இந்த சான்றிதழ் - அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில், பூர்வீக சொத்து தொடர்பாக அரசின் வாரிசுரிமை சான்றிதழ் பெறுவதில் இதுவரை இருந்த, நடைமுறைகள் மாற்றப்பட்டு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறை:

தமிழகத்தில், சொத்துரிமை பெற வாரிசு சான்றிதழ் வழங்குவதில் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இனி, இந்த வாரிசு சான்றிதழ் பெற இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கணவர் அல்லது மனைவி, மகன் அல்லது மகள் இவர்கள் மட்டுமே வாரிசாக அறிவிக்கப்படுவர். இதற்கு முன் இறந்து போனவரின் பெற்றோர், கணவன் அல்லது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் வாரிசாக அறிவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதுபோக இந்த சான்றிதழில், அவர்கள் உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதை குறிப்பிட வேண்டும். ஒருவேளை மகன் அல்லது மகள் இறந்திருந்தால், அவர்களுடைய வாரிசுதாரர் தனியே சான்றிதழ் பெற வேண்டும் எனவும், திருமணம் செய்யாதவர் இறந்தால் தாய், தந்தை, உடன்பிறப்பு இவர்கள் வாரிசாக அறிவிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு நகை கடனுக்கான வட்டி விகிதத்தில் அதிரடி மாற்றம் – அரசுக்கு முக்கிய கோரிக்கை!!

அதே போல் ஒருவர் 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போய் இருந்தால், அவர்கள் இந்த சான்றிதழ் பெற இனி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும், நடைமுறைக்கு வருவதாகவும் தாசில்தார் வழங்கிய சான்றிதழ் திருப்தி இல்லையெனில் ஆர்டிஓ அலுவலகத்திலும், மாவட்ட வருவாய் அலுவலகத்திலும் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here