அதிதி போட்ட ஆட்டத்துக்கு இப்போ பலன் கிடைச்சுருச்சு.., ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்!!

0
அதிதி போட்ட ஆட்டத்துக்கு இப்போ பலன் கிடைச்சுருச்சு.., ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்!!
அதிதி போட்ட ஆட்டத்துக்கு இப்போ பலன் கிடைச்சுருச்சு.., ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்!!

விருமன், மாவீரன் போன்ற படங்களை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் நடிகை அதிதி சங்கர் கை கோர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை அதிதி சங்கர்:

சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தவர் தான் நடிகை அதிதி ஷங்கர். நடித்த முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பாலும், அழகிய நடனத்தாலும் ரசிகர்களின் மனதை களவாடி சென்றார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்றது. தற்போது அவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வந்தாச்சு பாரதி கண்ணம்மா Climax – அம்பலமான வெண்பாவின் நாடகம்.., கண்ணீர் விட்டு கதறும் பாரதி!!

இந்நிலையில் நடிகை அதிதி சங்கர் அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் அஜித் கேரியருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் தான் பில்லா. இப்படத்தை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் கடைசியாக ‘ஷெர்ஷா’ என்ற இந்திப் படத்தை எடுத்துள்ளார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

அதனால் இப்படத்தை தமிழில் எடுக்கலாம் என்று இயக்குனர் நினைத்துள்ளார். இந்நிலையில் தமிழில் அவர் இடத்தில் நடிப்பதற்கு நடிகை அதிதி சங்கர் கமிட் ஆகியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here