ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் – தமிழகத்தில் புதுப்பொலிவு பெறும் 5 முக்கிய நிலையங்கள்! அரசு உறுதி!!

0
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் - தமிழகத்தில் புதுப்பொலிவு பெறும் 5 முக்கிய நிலையங்கள்! அரசு உறுதி!!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் - தமிழகத்தில் புதுப்பொலிவு பெறும் 5 முக்கிய நிலையங்கள்! அரசு உறுதி!!

தமிழகத்தில்முக்கிய 5 நகரங்களில் செயல்படும் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று முன்னதாக அரசு அறிவித்திருத்த நிலையில் தற்போது அதற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ரயில் நிலையங்கள்:

சென்னை எழும்பூா், காட்பாடி, கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் என தமிழகத்தின் 5 ரயில் நிலையங்களும் எர்ணாகுளம், எர்ணாகுளம் டவுன் மற்றும் கொல்லம் என கேரள மாநிலத்தில் 3 ரயில் நிலையங்களும் மற்றும் புதுச்சேரி ரயில் நிலையமும் என மொத்தம் 9 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட இருக்கின்றன.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இப்பணிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி முன்னதாகவே அடிக்கல் நாட்டினார். மேலும் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளுக்காக ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் சென்னை எழும்பூர், கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களுக்கு மறுசீரமைப்புக்கான ஒப்பந்தப் பணிகள் விரைவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஆப்பு..,,இனி இதற்கு அனுமதி கிடையாது..,அதிரடி உத்தரவு!!

அதாவது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, டெண்டர் திறக்கப்பட்டு, ஒப்பந்தம் வழங்குவதற்கான பணி முடிந்துள்ளதாகவும், கன்னியாகுமரி நிலையத்திற்கு டெண்டர் கோரப்பட்டு அக்டோபர் 26, 2022 அன்று திறக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here