பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயாருமான கட்டமனேனி இந்திரா தேவி இன்று காலமானார். இவரின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகேஷ் பாபுவின் தாயார்:
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் ஸ்பைடர் என்ற திரைப்படத்தின் மூலம் நேரடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களையும் தன் வசம் இழுத்தார். இதையடுத்து இவர் சவுத் இந்தியன் பிரின்ஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் மகேஷ் பாபுவின் அம்மா இந்திரா தேவி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக தனது 56வயதில் இன்று ஹைதராபாத்தில் காலமானார். இந்த செய்தி, திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
நடிகர் விஷால் வீட்டின் மீது தாக்குதல் – காவல் நிலையம் அருகே நடந்த துணிகரம்! போலீஸ் வலைவீச்சு!!
நடிகர் மகேஷ் பாபுவின் அம்மா, வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக மோசமான நிலையில் இருந்தாக சொல்லப்படுகிறது. மேலும் இந்திராதேவியின் உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் வைக்கப்பட்டு, அவரது இறுதி ஊர்வலம் நாளை மறுநாள் மகா பிரஸ்தானத்தில் நடைபெறும் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.