ஒரே ஒரு Talent-ஐ வைத்து ஹிட் படங்களை தட்டி தூக்கிய சத்யராஜ்.., என்ன ஒரு சாமர்த்தியம் பாருங்களே!

0
ஒரே ஒரு Talent-ஐ வைத்து ஹிட் படங்களை தட்டி தூக்கிய சத்யராஜ்.., என்ன ஒரு சாமர்த்தியம் பாருங்களே!

இயக்குனர் மணிவண்ணன் படைப்பில் உருவான நூறாவது நாள் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு முதலில் வேறொரு பிரபலம் கமிட் ஆகியதை தொடர்ந்து அதன் பின்னர் சத்யராஜ் இணைந்ததாக கூறப்படுகிறது.

நூறவாது நாள்:

கோலிவுட்டில் பல வெற்றிப் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் தான் இயக்குனர் மணிவண்ணன். அந்த வகையில் அவர் இயக்கிய அமைதிப்படை, காதல் ஓய்வதில்லை போன்ற திரைப்படங்கள் அடங்கும். இதனை தொடர்ந்து இயக்குவது மட்டுமின்றி நடிப்பதில் ஆர்வம் காட்டி கிட்டத்தட்ட 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘நூறாவது நாள்’ திரைப்படம் ரசிகர் மத்தியில் அமோக வெற்றியை அடைந்தது. இதில் நடிகர் மோகன், சத்யராஜ், நளினி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சத்தியராஜ்க்கு பதில் முன்னதாக வேறொரு பிரபல நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது அந்த சமயத்தில் வில்லனாக வலம் வந்த நடிகர் விஜயன் நடிக்க இருப்பதாக இருந்தது.

விவாகரத்து சர்ச்சையை உடைத்தெறிந்த தனுஷ் – இவ்ளோ நடந்த பின்னாடி No டவுட்! எல்லாம் கிளியர்!!

அதன் பின்னர் அறிமுகமான சத்யராஜின் நக்கலான பேச்சு அவருடைய கேரக்டர் முற்றிலும் பிடித்து போனதால் அவரை நடிக்க வைத்தார். இவர் படத்தில் கொஞ்சம் நேரம் வந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து மணிவண்ணன் -சத்யராஜ் காம்போ இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here