அடேங்கப்பா.. சிவகார்த்திகேயன் படத்துக்கு இவ்ளோ மவுசா? பல கோடி செலவு செய்து வாங்கிய நிறுவனம்!

0
அடேங்கப்பா.. சிவகார்த்திகேயன் படத்துக்கு இவ்ளோ மவுசா? பல கோடி செலவு செய்து வாங்கிய நிறுவனம்!

இன்று உலகமே தூக்கி வைத்து கொண்டாடும் அளவுக்கு மிகப்பெரிய ஹீரோவாக கடின உழைப்பால் உச்சத்திற்கு சென்றவர் என்றால் அது ‘நம்ம வீட்டு பிள்ளை’ சிவகார்த்திகேயன் தான். விஜய் டிவியின் செல்லக்குட்டியாக இருந்த சிவகார்த்திகேயன் முதன் முதலில் ஆங்கராக அவரது மீடியா பயணத்தை தொடங்கினார்.

இப்படி மைக்கை பிடித்து பிரபல ஹீரோக்களிடம் உங்கள் வழக்கை முன்னேற்றத்துக்கு காரணம் என்னவென கேள்வி கேட்ட தொகுப்பாளர் சிவகார்த்தியேன், இன்று பலரது கேள்விக்கு பதில் சொல்லமுடியாத அளவுக்கு ரீச்சை பெற்றுள்ளார். மெரினா படத்தில் தொடங்கி அடுத்தடுத்து படங்களில் தொடர் வெற்றியை கண்ட சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகி வரும் ப்ரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பொதுவாக சிவகார்திகேயன் படம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு சிவகார்த்திகேயன் என்றால் கொள்ளை பிரியம். அப்படி பார்த்து பார்த்து கதையை தேர்வு செய்யும் ஒவ்வொரு படமும் அடிதூள் ஹிட்டு தான். அந்த வகையில் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. அதனால் ஸ்டார் குரூப் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய விலையை கொடுத்து இப்படத்தின் டிஜிட்டல் உரிமைகளை வங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸ் செய்யப்படுவதற்கு முன்னரே இப்படத்திற்கு இவ்வளவு மவுசா என ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here