ஒருவழியாக முடிவுக்கு வந்த ராமராஜன், நளினி விவகாரத்து சர்ச்சை – அப்போ நடந்தது இதுதானா?

0
ஒருவழியாக முடிவுக்கு வந்த ராமராஜன், நளினி விவகாரத்து சர்ச்சை - அப்போ நடந்தது இதுதானா?

ஒரு காலத்தில் சரியான வாய்ப்பை தேடி அலைந்த பல நடிகர்களது வாழ்க்கைக்கு இயக்குனர் பாலா பெரும் முன்னதாரணமாக இருந்திருக்கிறார். அதில் ஒருவர் தான் நடிகர் சியான் என்ற விக்ரம். இவருக்கு சியான் என்ற அடைமொழியே பாலா இயக்கத்தில் ஹிட் கொடுத்த சேது படம் தான். இந்த படம் விக்ரமுக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அப்பாவி பெண் ரோலில் நடித்த அபிதா மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று ரீச் அடைந்தார். அதாவது, இந்த படத்தில் அபிதாவுக்கு கிடைத்த அங்கீகாரம் அடுத்து அவர் நடித்திருந்த எந்த படத்திலும் கிடைக்கவில்லை. இதனால் கோலிவுட் பக்கம் காணாமல் போன அபிதா தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

பள்ளியில் ஆசிரியருக்கு நடந்த கோர சம்பவம்.. மாணவர்களின் வெறிச்செயல் – வலுக்கும் கண்டனம்!

அப்படி சின்னத்திரையில் ஹிட் அடித்த திருமதி செல்வம் தொடர் அபிதாவுக்கு மிகப்பெரிய combeback ஆக அமைந்தது. இந்த நிலையில் இவரை குறித்து புது சர்ச்சை ஒன்று இணையத்தில் பரவலாக பேசபப்ட்டு வருகிறது. அதாவது நடிகர் மற்றும் இயக்குனர் ராமராஜன் அவரது காதல் மனைவி நளினியை விவாகரத்து செய்ய ‘சீறி வரும் காளை’ படத்தில் உடன் நடித்த நடிகை அபிதா தான் காரணம் என பேசப்பட்டு வருகிறது.

அதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதமாக அபிதா பேசியுள்ளார். அதில் ராமராஜன் அவர்களும் நளினியும் பிரிவதற்கு நான் காரணம் இல்ல. சொல்ல போனால் நான் அவங்கள பார்த்தது கூட கிடையாது. நான் ஷூட்டிங் போவேன் வருவேன் அவ்ளோதான். அத தாண்டி எனக்கு எதுவுமே தெரியாது. இப்படி இருக்கப்போ இது மாதிரி எந்த தப்பான தகவலும் என்னை வைத்து பரப்ப வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here