பல ஆண்டுகள் கழித்து ரசிகர்களுக்கு காடவர் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார் அமலா பால். அறிமுக இயக்குனர் அனூப் இயக்கும் இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நேற்று (12-08-2022) வெளியாகியுள்ளது.
ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் அமலா பாலுக்கு இது ஒரு நல்ல ஒரு comeback படமாக அமைந்துள்ளது. இதனால் இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
சமீபத்தில் கூட தன்னை வளரவிடாமல் செய்வதற்கு சினிமா துறையில் சதி நடக்கிறது என கூறி அமலா பால் அதிர்ச்சி அளித்திருப்பார். இந்நிலையில் காடவர் பட ப்ரோமோஷனுக்காக விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி வெளியிட்ட வண்ணம் உள்ளார். இவரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோக்கள் இதோ..