முதல் நாள் கலெக்சனில் பட்டையை கிளப்பிய விருமன் – அதிரடியாக வெளியான வசூல் விவரம்!!

0
முதல் நாள் கலெக்சனில் பட்டையை கிளப்பிய விருமன் - அதிரடியாக வெளியான வசூல் விவரம்!!

கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி நேற்று வெளியான விருமன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம், இணையத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

முதல் நாள் வசூல்:

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில்  கிராமத்து பாணியில் உருவாகிய விருமன் திரைப்படம்  தமிழகம் முழுவதும் நேற்று வெளியானது. மாநிலம் முழுவதும் உள்ள 475 திரைப்படங்களில் வெளியான இந்த திரைப்படம், தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இயக்குனர் சங்கரின் மூத்த மகள் அதிதி சங்கர், இந்த படத்தின் மூலம் நேரடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே திறமையான நடிப்பு, யுவன் இசையில் பாடல் என  பெரிய அளவில் அசத்தியுள்ளார். தற்போது விருமன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

அதாவது, இந்தப் படம் நேற்று ஒரே நாளில் 8 கோடி வரை  வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து இந்த திரைப்படம், ரசிகர்களுடைய பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலில் கல்லா கட்டி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here