அவதார் திரைப்படத்தின் அடுத்தடுத்த 5 பாகங்கள் திட்டமிட்டபடி வெளியாகும் எனவும் அதற்காக 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7500 கோடி) பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்து உள்ளார்.
ஆஸ்கர் அவதார்:
2009ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் அவதார். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலக சினிமாவையே புது உச்சத்தில் கொண்டு சென்று வசூலை வாரிக் குவித்தது இப்படம். ஆஸ்கர் விருதுகளையும் வாங்கிய இப்படத்தின் 2ம் பாகத்தை எடுக்க ஜேம்ஸ் கேமரூன் மிக தீவிரமாக உள்ளார். கொரோனவால் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ள போதிலும் திட்டமிட்டபடி 2ம் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் 17ல் வெளியாகும் என தெரிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் திரையுலக முன்னேற்றத்தை கடுமையாக பாதித்து உள்ளதாக தெரிவித்த ஜேம்ஸ் கேமரூன் கண்டிப்பாக அவதார் படத்தின் 2ம் பாகம் திட்டமிட்டபடி வெளியாக எங்கள் பணியாளர்கள் வீட்டில் இருந்தே தீவிரமாக பணியாற்றுவதாக தெரிவித்து உள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என ஜேம்ஸ் கேமரூன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
அவதார் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் 2023 டிசம்பரிலும், 4ம் பாகம் 2025 டிசம்பரிலும், 2027 டிசம்பரில் 5ம் பாகம் வெளியாகும் என தெரிவித்து உள்ள ஜேம்ஸ் கேமரூன் இப்பாகங்களை எடுத்து முடிக்க 1 பில்லியன் டாலர் (ரூ. 7500 கோடி) பட்ஜெட் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |