‘தன்னிறைவு இந்தியா’ – ரூ. 20 லட்சம் கோடி திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன்..! முழு விபரங்கள்..!

0

கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் மோடி அவர்கள் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் குறித்த விபரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

நிதியமைச்சரின் அறிவிப்புகள்:

மத்திய அரசின் இப்புதிய 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ‘தன்னிறைவு இந்தியா’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய வரையறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. ரூ. 3 லட்சம் கோடி மதிப்பில் சிறு, குறு நிறுவனங்களுக்கு எவ்வித பிணை ஆவணங்களும் இன்றி கடனுதவி வழங்கப்படும். கடனுதவி திட்டம் அக்டோபர் 31 வரை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த கடன்களை 4 ஆண்டுகளில் செலுத்தலாம் எனவும், முதல் ஓராண்டுக்கு தவணைத்தொகை வசூலிக்கப்படாது. மேலும்,

  • குறுந்தொழில்களுக்கான முதலீடு வரம்பு 25 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
  • சிறு நிறுவனங்களுக்கான முதலீடு வரம்பு 5 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
  • நடுத்தர தொழில்களுக்கான முதலீடு வரம்பு 10 கோடி ரூபாயில் இருந்து 20 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
  • ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை முன்னேற்ற 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும். இதன் மூலம் 2 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும்.
  • சிறுதொழில் நிறுவனங்களுக்கு சேர வேண்டிய அனைத்து நிலுவைத் தொகைகளும் 45 நாட்களுக்குள் வழங்கப்படும்.
  • 200 கோடி ரூபாய்க்கு குறைவான டெண்டர்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு விடப்படாது. இந்திய சிறு, குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

இ.பி.எப் தொகை:

ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுக்கான பி.எப் தொகையை மத்திய அரசே செலுத்தும். நிறுவனங்கள் செலுத்தும் பி.எப் தொகை 12% ல் இருந்து 10%ஆக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதன் மூலம் 3.67 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், 77.22 லட்சம் பேர் பயன்பெறுவர் எனவும் நிதியமைச்சர் தெரிவித்து உள்ளார்.

நிதி ஒதுக்கீடு:

  • வங்கிசாரா நிதி மற்றும் வீட்டு நிதி நிறுவனங்களுக்கு ரூ. 30,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறச் செய்துள்ள மின்சார விநியோக நிறுவனங்களுக்கு ரூ. 90,000 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
  • ரயில்வே, சாலை உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் வங்கி உத்தரவாதம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்து உள்ளார்.
  • புதிய மற்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்டுமான திட்டங்களின் பதவிக்காலம் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
  • அரசு கட்டங்கள் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பணிகளை முடிக்க 6 மாத காலம் நீட்டிக்கப்பட்ட அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
  • டிடிஎஸ் பிடித்தம் 25% குறைக்கப்படுவதாகவும் இது நாளை முதலே அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்களிடையே கூடுதலாக 50,000 கோடி ரூபாய் பணம் புலரும் வாய்ப்பு உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
  • வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு தேதி ஜூலை 31ல் இருந்து நவம்பர் 30 ஆக மாற்றப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here