கூட்டுறவு வங்கியில் பித்தளை நகைகள் அடகு – பல கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி!!

0

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களில் சிலர் பித்தளை மற்றும் ஈயம் பூசிய நகைகளை அடமானம் வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பண மோசடி:

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைகளை அடகு வைத்து நகை கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. ஆனால், இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த நகை கடன் தள்ளுபடியை பெறுவதற்காக சிலர் பித்தளை மற்றும் தங்க முலாம் பூசிய நகைகளை அதிகாரிகள் துணையுடன் அடமானம் வைத்து கடன் பெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது.

இது மட்டுமில்லாமல், இன்னும் ஒரு சிலர், ஒரே ஆதார் எண்ணை வைத்து இரண்டு கோடிக்கு மேல் கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ஒரே குடும்பத்தை சார்ந்த நபர்கள் பல்வேறு கிளைகளில் கிலோ கணக்கில் நகைகளை அடகு வைத்து ஒன்றரை கோடிக்கு மேல் கடன் வாங்கியிருப்பது அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here