ராஜா ராணி 2 – மீண்டும் சந்தோசத்தில் மிதக்கும் சிவகாமி குடும்பம் – வயிறு எரிந்து போகும் அர்ச்சனா!!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது சரவணன் சந்தியா மீது சிவகாமி மேலும் கோபமடைய இதனால் குடும்பமே சோகமாகிறது. அடுத்ததாக விக்கி பாஸ்கருடன் நட்பாக பழக பல திட்டங்களை போடுகிறார்.

ராஜா ராணி 2

சரவணன், சந்தியா தற்போது மீண்டு வந்துள்ள நிலையில் அவர்களை ஆரம்பத்தில் வரவேற்ற சிவகாமி தற்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக சந்தியா சரவணன் மீது வெறுப்பை கொட்ட ஆரம்பித்தார். சந்தியா, சரவணன் அப்படி பட்டவர் கிடையாது என்று எடுத்து சொல்ல ஆரம்பிக்க அதற்கு சிவகாமி என் மகனை பத்தி எனக்கே எடுத்து சொல்றியா என்று கோவமாக செல்கிறார்.

இன்றைய எபிசோடில் சந்தியா சிவகாமியிடம் அனைத்தையும் பொறுமையாக எடுத்து சொல்கிறார். அவர் நல்ல கணவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அவர் நல்ல மகன் என்று சொல்கிறார். ஆனால் எதையும் கேட்கும் மனபக்குவதில் சிவகாமி இல்லை.

என் வாழ்க்கை நல்லா இருக்கட்டும்னு யோசிச்சாரே தவிர அவருக்கு வேற எந்த எண்ணமும் கிடையாது என்று சொல்கிறார். அடுத்ததாக பாஸ்கர் ரோட்டில் நடந்து கொண்டிருக்க விக்கி பிளான் செய்து பர்ஸில் இருக்கும் பணத்தை கீழே போடுகிறார்.

அதனை பாஸ்கர் எடுத்து கொடுக்க அந்த நேரத்தில் செட் செய்த ஆளை வைத்து பாஸ்கரின் பேக்கை எடுக்கிறார். பாஸ்கர் அவரை துரத்தி செல்ல விக்கி அந்த பேக்கை காப்பாற்றி கொடுப்பது போல பாவனை செய்கிறார். இதனால் பாஸ்கர் விக்கியை நல்லவன் என்று நம்ப தன் வேலை சுலபமாக முடிந்து விட்டத்தை நினைத்து சிரிக்கிறார் விக்கி.

அடுத்ததாக வீட்டில் உள்ள அனைவரும் சோகமாக இருக்க பார்வதி அனைவரையும் சாப்பிட அழைக்கிறார்.  சிவகாமி சரவணனை சாப்பிட அழைக்கிறார். அம்மாவுக்கு திட்ட எல்லா உரிமையும் இருக்கு, அதை நெனச்சு கவலைப்படாத என்று சொல்கிறார். மேலும் சரவணனுக்கு தன் கையால் ஊட்டி விடுகிறார்.

அதுமட்டுமில்லாமல் செந்தில், ஆதி மற்றும் பார்வதிக்கும் ஊட்டி விடுகிறார். இதனை பார்த்து அனைவரும் சந்தோசமாக இருக்க அர்ச்சனாவுக்கு பத்திக்கொண்டு வருகிறது. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here