ராஜா ராணி சீரியலில் பிரபலமாக நடித்து வரும் அர்ச்சனா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்நியன் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜா ராணி அர்ச்சனா
ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் எடுத்து வைத்தவர் தான் அர்ச்சனா. இவர் ஆரம்பத்தில் ஷார்ட் பில்ம்களில் நடித்து பிரபலமானவர். இந்த சீரியலில் அவரின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இவரும் நடந்து கொள்ள சீரியல் செம ஹிட்.
அதிலும் அந்த போலீஸ் கம்பளைண்ட் செய்த விவகாரம் தான் சீரியலை தூக்கி நிறுத்தியது. எப்பொழுதெல்லாம் அர்ச்சனாவை வைத்து வீட்டில் பிரச்சனை நடக்கிறதோ அப்பொழுதெல்லாம் சீரியல் டாப் ஹிட்டில் எகிறி விடும்.
இப்பொழுது அவர் தனக்கு ஜோடியாக நடிக்கும் பாலாஜி தியாகராஜனுடன் இணைந்து ஒரு சீரிஸில் நடித்து வருகிறார். அதிலும் இருவரும் பிசியாக இருந்து வருகின்றனர். மேலும் அர்ச்சனா அளவிற்கு ரீல்ஸ் செய்வது கஷ்டம் தான். ஏனெனில் ரியலையே தோற்கடிக்கும் அளவிற்கு ரீல்ஸ் செய்து விடுவார்.
அவரது அந்த ரியாக்சன், டான்ஸ் அனைத்துமே தூள் கிளப்பி விடும். வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தால் கூட சந்தேகமில்லை. அவருக்கு நாயகியாக வலம் வர வேண்டும் என்பது தான் ஆசையாம்.
அதன் ஒரு முயற்சியாக தான் தற்போது ராஜா ராணியில் ஜொலித்து வருகிறார். மேலும் இன்ஸ்டாவில் தற்போது அவர் ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்