விஜய் டிவியில் பிரபல சீரியலாக மக்களின் நன்மதிப்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் வீட்டின் கடைக்குட்டி தம்பியாக நடித்து வருபவர் சரவண விக்ரம் மேலும் அவரின் காதல் மனைவி ஐஸ்வர்யாவாக நடித்து வருபவர் வி ஜே தீபிகா. தற்போது அவர்கள் தங்களின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போதைய கதையாக, வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு, மூர்த்திக்கு தெரியாமல் ஜீவா, கதிர், முல்லை, மீனா, தனம் என அனைவரும் உதவி வருகின்றனர். மேலும் கண்ணனின் அம்மா லட்சுமி, கண்ணனையே நினைத்து உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். இவ்வாறு பல சோகங்கள் மற்றும் வேதனைகளுடன் அந்த சீரியலின் கதை நகர்கிறது.
இந்நிலையில் இந்த சீரியலின் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவில் தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் தரும் ஆதரவை நினைத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.
மேலும் ரசிகர்கள் எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த தங்களின் வீடியோக்களை காண்பித்து அவர்களின் இந்த ஆதரவு மற்றும் அன்பை குறித்து மன மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் இந்த வீடியோ எடுப்பதற்கு எப்படி தோன்றியது என்பது குறித்தும் தெரிவித்து உள்ளனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்