விஜயின் திருமண நாளில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

தமிழின் உச்சகட்ட நடிகராக திகழும் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விஜயின் பீஸ்ட்

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜயின் பீஸ்ட் படத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. போன லாக்டவுனில் இருந்தே விஜய் படத்திற்கு தான் அதிக மவுசு. கோடிக்கணக்கான லாபத்தை விஜய் படம் மட்டுமே எட்டி வருகிறது.

மேலும் வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கும் விஜய் வாய்ப்பளித்து வருகிறார்.  கிட்டத்தட்ட 2 படங்கள் வரை அட்லீ உடன் இணைந்து படம் செய்த விஜய் அதன் பிறகு புதிய இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் காட்டி வருகிறார்.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு வருகிறது.  ஷூட்டிங் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலானது.

இப்படி இருக்க தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் திரையரங்குகள் 50% பார்வையாளர்கள் அனுமதியோடு திறக்கப்பட்டதை அடுத்து இந்த பீஸ்ட் திரைப்படம் வரும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்ற தகவல் வைரலாகி வருகிறது. ஆனால் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தற்போது பீஸ்ட் திரைப்படம் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here