தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பொளக்கட்டும் பற பற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. தற்போது தளபதி ரசிகர்கள் இந்தியளவில் #PolakatumParaPara என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றன.
தளபதியின் மாஸ்டர்..!
லொகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் மாதத்திற்கு மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் லிரிக் வீடியோக்கள் வரிசையாக வெளி வந்து வைரலாகி உள்ளன.
‘பொளக்கட்டும் பற பற’ பாடல் வைரல்..!
இந்நிலையில், தற்போது பொளக்கட்டும் பற பற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த பாடல் விஜய் சேதுபதியின் இன்ட்ரோ பாடலாகவோ, அல்லது கிளைமேக்ஸ் பாடலாகவோ இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ள வருத்தத்தில் இருந்த தளபதி ரசிகர்களுக்கு மாஸ்டர் படக்குழு இந்த லிரிக் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதுதான் சாக்கு என நினைத்துக் கொண்ட தளபதி ரசிகர்கள் இந்தியளவில் #PolakatumParaPara என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றன.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |