குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ் அவர்கள். இவர் தற்போது ஆண் பாவம் பட பாடலுக்கு கேரவனில் செம குத்தாட்டம் போட்டு உள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து உள்ளனர்.
மிகவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பலர் திரையில் சாதித்து வருகின்றனர். அந்த வகையை சார்ந்தவர் தான் புகழ். விஜய் டிவியில் முதலில் ஒரு நகைச்சுவை போட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்று அந்த போட்டியில் இருந்து விலக்கப்பட்டார். அதன் பிறகு அந்த டிவியின் ஒரு சில நிகழ்ச்சிகளில் தன் முகத்தை காட்டினார். அதாவது, அது இது எது போன்ற விஜய் டிவியின் ஷோக்களில் பெண் வேடம் தரித்து பலரை சிரிக்க வைத்தார்.
இவ்வாறு அவர் தன்னுடைய திறமையால் மெல்ல மெல்ல முன்னேறினார். அதன் பிறகு அவருக்கு கிடைத்த அறிய வாய்ப்பு தான் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக தனது காமெடி கவுண்டர்களில் அனைவரையும் ஈர்த்தார். மேலும் ஷிவாங்கி உடன் உள்ள அண்ணன் தங்கை பாசம் மற்றும் சக பெண் போட்டியாளர்களுடன் அவர் செய்யும் சேட்டைகள், லூட்டிகள் என அனைத்தும் அவரின் புகழுக்கு துணைபுரிந்தது.
இந்நிலையில் தற்போது இவர் ஓரிரு படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தன்னுடைய கேரவனில் பாண்டியன் மற்றும் பாண்டியராஜன் கூட்டணியில் வெளியான ஆண் பாவம் படத்தில் இடம் பெற்ற வந்தனம் வந்தனம்…என தொடங்கும் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பல லைக்ஸ்களை பெற்று வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்