தன் கர்ப்பகால போட்டோஷூட் வீடியோவை வெளியிட்ட பாக்கியலட்சுமி நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நந்திதா ஜெனிபர் தற்போது கர்ப்பகால போட்டோஷூட் நடத்தி அதனை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஜெனிபர். இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’ என்ற படத்தில் மூலம் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தவர். அதன் பிறகு பல படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.

தெலுங்கிலும் வில்லியாக நடித்து அசத்தியுள்ளார். அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் போகவே சீரியலில் அடியெடுத்து வைத்தார். இவரது முதல் சீரியலே சன் டிவியில் நாகவல்லி என்ற சீரியல் தான். அதன் பிறகு புவனேஸ்வரி என்ற சீரியலில் நடித்திருந்தார்.

அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பின் லட்சுமி ஸ்டார்ஸ் என்ற சீரியலில் நடித்தார். அந்த சீரியலிலும் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் அவர் நடித்த ராதிகா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்தும் போனது. இப்படி இருக்க தற்போது அவர் அந்த சீரியலை விட்டும் விலகினார்.

இதனால் பலரும் வருத்தமடைந்தனர். இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியடைய செய்தார். தற்போது அவர் போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ?ℯ??_???ℴ?? (@jenniferr252)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here