விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. அவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் உடலை அழகாக கிச்சென்று வைக்க ரசிகர்களுக்கு சில உடற்பயிற்சிகளை செய்து அந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன்னு ஜூனியர்ஸ் என்ற நடன போட்டியில் ஒரு போட்டியாளராக களம் கண்டவர் கேப்ரில்லா. அந்த போட்டியில் தன்னுடைய நடன திறமையால் வெற்றி பெற்றார். அதன் பிறகு விஜய் டிவியின் ஒரு சில நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு சீரியலிலும் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் சீசன் 4.
இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய முழு திறமையையும் காட்டி, கொடுக்கப்பட்ட அனைத்து சவால்களையும் திறமையாக கையாண்டார். அந்த நிகழ்ச்சியின் இடையில் கிடைக்க பெற்ற ஒரு வாய்ப்பை பயன்படுத்தி பண பரிசை தட்டிச் சென்றார். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் அவர் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சியாமானார்.
தற்போது அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன போட்டியில் நடனமாடி வருகிறார். மேலும் இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் உடலை பேணி பராமரிக்க மற்றும் அழகான தோற்றத்தில் வைக்க பல உடற்பயிற்சிகளை ரசிகர்களுக்கு கற்பித்து உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்