நடிகர் சூர்யாவிற்கு இன்று பிறந்தநாள்: ட்ரெண்டிங் ஹாஷ்டேக்குகளால் களைகட்டும் ட்விட்டர்!!

0
டாக்டர் பட நாயகிக்கு கிப்ட் கொடுத்து அசத்திய நடிகர் சூர்யா - நெகிழ்ந்து போய் பதிவிட்ட நடிகை!!
டாக்டர் பட நாயகிக்கு கிப்ட் கொடுத்து அசத்திய நடிகர் சூர்யா - நெகிழ்ந்து போய் பதிவிட்ட நடிகை!!

நடிகர் சூர்யா இன்று (23 ஜூலை 2021) தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை சூர்யாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் மற்ற ஹீரோக்களை வீட ரசிகர்கள் மனதுக்கு நெருக்கமானவர் சூர்யா. அதற்கு காரணம் அகரம் போன்ற தொண்டு நிறுவனங்கள் மூலம் சூர்யா செய்திருக்கும் சமூகப் பணிகள் ஒரு காரணம்.

கடைசியாக சூர்யாவின் சூரரைப்போற்று போற்று படம் OTT யில் வெளியாகி ஹிட் அடித்தது. இந்நிலையில் சூர்யா அவர்களின் 40 வது படத்தை பசங்க, வம்சம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (22 ஜூலை) மாலை படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. சூர்யாவின் 40 வது படத்துக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூர்யா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் இந்த நாளில் இவர் ரசிகர்கள் #HBDSuriya என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here