விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் ரோஷினியின் ஷூட்டிங் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பாரதி ஓரளவிற்கு மனமிறங்கி கண்ணம்மா வீட்டிற்கு வரும் அளவிற்கு முன்னேறி விட்டார். அந்த எபிசோடு டாப் ஹிட் அடித்தது.
தற்போது அனைவரின் எதிர்பார்ப்பும் என்னவென்றால் கண்ணம்மாவும் பாரதியும் எப்பொழுது ஒன்று சேருவார்கள்?? வெண்பா எப்பொழுது மாட்டுவார்?? என்பது தான். இந்த சீரியலில் கண்ணம்மாவிற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.
முதல் சீரியலிலேயே இந்த அளவிற்கு புகழ் என்றால் அது அவர் நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் தான் என்று சொல்ல வேண்டும். கண்ணம்மா போல தான் தைரியமாக இருக்க வேண்டும் என்று ஒரு முன்னுதாரனமாக இந்த சீரியல் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது தங்கையான துளசியுடன் இணைந்து டி.ராஜேந்தர் ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்