தமிழ் திரையுலகில் உச்சகட்ட நடிகராக வலம் வந்த அஜித் உடன் ரோஜா சீரியல் நடிகை நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தல அஜித்
தமிழ் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவர் தான் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வந்த இவர் பல முயற்சிகளுக்கு பிறகு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.
என்ன தான் தல, தளபதி ரசிகர்கள் தனித்தனியாக சண்டையிட்டு வந்தாலும் விஜய் அஜித்துக்கு இடையே ஒரு ஒற்றுமை இருக்க தான் செய்கிறது. இவர்கள் ஆரம்பத்திலேயே ஒன்றாக இணைந்து படத்தில் நடித்துள்ளனர்.
ஆனாலும் தற்போது உள்ள சூழலில் இருவரும் இணைந்து நடித்தால் கண்டிப்பாக அது மாஸ் ஹிட் தான். அதற்காக தான் பலரும் காத்துக்கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே திரைப்படமும் மாஸ் ஹிட் தான் அடித்தது.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் தான் ரோஜா சீரியலில் நடித்த கல்பனா. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த படத்தை பலரும் பார்த்திருந்தாலும் அதில் நடித்தது இவர் தானா?? என்று பலரும் ஷாக்காகியுள்ளனர்.