முதல் இடத்தை மீண்டும் தட்டிச்சென்ற கேன் வில்லியம்சன்…! – டாப் 10ல் மூன்று இந்திய வீரர்கள்!!!

0

நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்து உள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய வீரரை பின்னுக்கு தள்ளி கேன் வில்லியம்சன் முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளார். மேலும் முதல் பத்து  இடங்களுக்குள் மூன்று இந்திய வீரர்கள் இடம் பிடித்து உள்ளனர்.

ஆண்களுக்கான டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி. இந்த பட்டியலில் வீரர்களுக்கான ரேட்டிங் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து வீரரான கேன் வில்லியம்சன்  901 புள்ளிகளை பெற்று தரவரிசையில் முதலிடம் பிடித்து உள்ளார். அதே போல் 891 புள்ளிகளை பெற்று  ஆஸ்திரேலிய   வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் இதில் இந்திய வீரர்கள் முதல் பத்து இடங்களில் உள்ளனர்.

அதன்படி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 812 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் உள்ளார். அதே போல மற்றொரு இந்திய வீரரான ரோகித் சர்மா 759 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார். அதே போல் ரிஷப் பந்த் என்று இந்திய வீரர் 752 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்து உள்ளார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் , ஏற்கனவே முதலிடத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் பின்னுக்கு தள்ளி மீண்டும்  முதலிடத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here