விஜய் சேதுபதியின் முதல் வெற்றிக்கு அடித்தளம் இந்த சீரியல் தானா?? இத்தனை நாளு இது தெரியாம போச்சே!!

0
vijay sethupathi
vijay sethupathi

தமிழ் சினிமாவின் தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி ஏற்கனவே சின்னத்திரையில் நடித்துள்ளாராம். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி

பிட்ஸா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வருகிறார். தனது விடா முயற்சியால் தான் இந்த அளவிற்கு முன்னேறியும் உள்ளார்.

இவரது இந்த வளர்ச்சிக்கு காரணமே இவரின் தன்மையான குணம் தான். எந்த பகட்டான வாழ்க்கையும் இல்லாமல் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கும் இவரின் குணம் தான் அனைவரையும் ஈர்த்தது. மேலும் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் எந்த கதாபாத்திரம் ஆனாலும் அதில் ஏற்று நடிக்கும் குணம் உள்ளவர்.

அதனால் தான் இவருக்கு இந்த அளவிற்கு பிரபலம் கிடைத்துள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு இவருக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ரசிகர்கள் உருவானார்கள். இவரின் வில்லத்தனத்திற்கு தான் அந்த படத்தை பார்க்க ஆர்வம் அதிகரித்தது.

இந்நிலையில் அவர் வெள்ளித்திரையில் தான் நடித்திருக்கிறார் என்று பார்த்தால் சின்னத்திரையிலும் கால் பதித்துள்ளார். அதாவது தமிழில் சன் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வந்த ‘பெண்’ சீரியலில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிப்பதற்கு அடித்தளம் போட்டதும் இந்த சீரியல் மூலம் தானாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here