யார் சொன்னா.., உன்ன எனக்கு பிடிச்சு இருக்குனு??? அப்பப்பா என்ன ஒரு நடிப்பு!! முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் முல்லை!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காவியா பல அதிரடி ரீல்ஸ் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். போகிற போக்கை பார்த்தால் வெள்ளித்திரை நடிகைக்கே டஃப் கொடுப்பார் போலையே என்று கிண்டலடித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. முல்லையின் அக்கா மல்லியின் பகட்டு பேச்சால் அனைவரையும் காயப்படுத்தி வருகிறார். இதனை முல்லை நேரடியாகவே திட்டியும் தீர்த்து விடுகிறார். ஆனாலும் அடங்காமல் பாக்கியா குடும்பத்திற்கு முன்பும் தனம் குடும்பத்தை கேவலப்படுத்துகிறார்.

இப்படி மல்லி ஒரு பக்கம் அனைவரையும் அசிங்கப்படுத்தி கொண்டிருக்க மற்றொரு பக்கம் அவரது மகன் பிரஷாந்த் கண்ணனை கடுப்பேத்தி வருகிறார். கடைசியில் ஐஸ்வர்யாவை திருமணம் செய்யும் அளவிற்கு சென்று விட்டார் பிரஷாந்த். இந்த விஷயம் ஐஸ்வர்யாவுக்கும் தெரியாது, கண்ணனுக்கும் தெரியாது.

இப்படி சுவாரசியமான பல திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காவியா. தனது அடாவடியாக நடிப்பாலும், கதிர் மேல் இருக்கும் பாசத்தாலும் குடும்பத்தின் மேல் உள்ள பற்றாலும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.

இப்படி இருக்க காவியா பல ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் உள்ள பேமஸ் டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த விடியோவை நீங்களே பாருங்களே.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here