பிஞ்சுலயே பழுத்ததா இருக்கும் போல… லம்போர்கினி காரை அசால்ட்டாக திருடிய 14 வயது சிறுவன்!!!

0

அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் ஒரு நபர் தனது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்ட விலை மதிப்புமிக்க தனது லம்போர்கினி காரை ஒருவர் திருடியதை கண்டு அதிர்ந்து, அந்த திருடனை தனது ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து துரத்தி சென்று உள்ளார். அதை பார்த்த அந்த திருடன் அந்த காரை நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். பின்னர் அந்த திருடன் தற்போது போலீசில் சரணைடைந்து உள்ளார்.

கிறிஸ் சாண்டர்ஸ் என்பவர் அமெரிக்காவின் மியாமியில் தனது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த 200,000 டாலர் மதிப்புள்ள மிக விலை உயர்ந்த லம்போர்கினி காரை யாரோ ஒருவர் திருடுவதை கண்டு உள்ளார். உடனே அவர் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்தக் கொண்டு அந்த நபரை பின் தொடர்ந்து உள்ளார். அவர் வீட்டில் இருந்து சில தூரம் வரை அந்த திருடனை துரத்தி உள்ளார். அதை கண்ட அந்த திருடன் அந்த காரை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டதாகவும் பின்னர் போலீசில் சரணடைந்தாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ் கூறுகையில், கிறிஸ் சாண்டர்ஸ் என்ற நபர் தனது வீட்டில் இருக்கும்போது வெளியில் நிறுத்தப்பட்ட தனது காரை ஒருவர் ஓட்டி செல்வதை தனது ஜன்னல் மூலம் பார்த்து உள்ளார். இதனை அடுத்து அந்த திருடனை கிறிஸ் சாண்டர்ஸ் ஸ்கூட்டர் மூலம் துரத்தி உள்ளார். பின்னர் காரை திருடியவர் 14 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.பின்னர் போலீஸ் அந்த சிறுவனை தேடி வந்த நிலையில் அவர் சரணடைந்து உள்ளார். வெறும் 14 வயதே ஆன சிறுவன் விலை உயர்ந்த சொகுசு காரை எவ்வித சிரமமின்றி திருடி சென்ற சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here