75% பணியாளர்களுக்கு நிரந்தரமாக Work From Home – முன்னணி ஐடி நிறுவனம் முடிவு..!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏராளமான தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு முடங்கி உள்ளன. ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்க வைத்து இழப்புகளை சரிசெய்து வருகின்றன. அந்த வகையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) ஒரு மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் ஐடி நிறுவனங்கள் 20 வருட காலமாக பின்பற்றி வந்த நடைமுறையில் மாற்றம் நிகழவுள்ளது.

90 சதவீத ஊழியர்கள்:

இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் TCS நிறுவனத்தின் 90 சதவீத ஊழியர்கள் தற்பொழுது வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகின்றனர். அந்நிறுவனத்தில் மொத்தமாக 3.55 லட்சம் ஊழியர்கள் பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருந்து வேலை செய்வதால் நிறுவனத்திற்கு எவ்வித வர்த்தக ரீதியான பாதிப்போ அல்லது வேலைபாதிப்போ ஏற்படவில்லை.

இதனால் TCS நிறுவனம் ஊரடங்கு முடிந்த பின்பு Secure Borderless Work Spaces (SBWS) என்ற திட்டத்தை பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் இந்த டிஜிட்டல் தளத்தில் சுமார் 35,000 மீட்டிங், 4.06 லட்ச அழைப்புகள், 340 லட்ச மெசேஜ் டிசிஎஸ் ஊழியர்கள் மத்தியில் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது ஊரடங்கு காலத்தில் மிகவும் வலுவடைந்து உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

Work From Home:

TCS நிறுவனத்தில் கொரோனா பாதிப்புக்கு முன் 20% ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர். அதனை மாற்றி வரும் 2025ம் ஆண்டிற்குள் 75% ஆக மாற்ற நிறுவனம் முடிவெடுத்து உள்ளது. அதன்மூலம் நிறுவனத்திற்கு பல வகைகளில் செலவுகள் குறையும். எனவே TCS 25/25 என்ற புதிய திட்டத்தை தற்போது கையில் எடுத்துள்ளது.

ஐடி நிறுவனங்கள் முடிவு:

இந்தியாவில் வர்த்தகம் & வருவாய் என இரண்டிலும் மிகப்பெரிய முன்னணி நிறுவனம் TCS. இது தற்பொழுது சைபர் செக்யூரிட்டி, பிராஜெக்ட் மேனேஜ்மெண்ட், வொர்க் மானிடரிங் போன்ற துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. இதனால் வீட்டில் இருந்து வேலை செய்வோர்க்கு ப்ராஜெக்ட் தரம் குறையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

TCS நிறுவனம் 75% ஊழியர்களை நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை செய்ய வைக்க முடிவெடுத்தால், கட்டாயம் பிற நிறுவனங்களும் (இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், காக்னிசென்ட்) அதை பின்பற்றும். இதன் மூலம் பல தேவையற்ற செலவுகள் குறைந்து நிறுவனத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. ஆனால் இதில் எந்தளவுக்கு நன்மை கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here