7 நாட்கள் முழு ஊரடங்கு அமல் – பொதுமக்கள் எடுத்த நடவடிக்கை!!

0
Lock
Lock

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இருப்பினும் அக்.31 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை திரும்பினாலும், மறுபுறம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

corona spread

தமிழகம் முழுவதும் இதுவரை 6,35,855 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், 9,984 பேர் உயிரிழந்து உள்ளனர். பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற விதிகளை முறையாக பின்பற்றாதவர்களே கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே கடுமையான விதிகளை அமல்படுத்துமாறு நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூரில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் தாமாக முன்வந்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதவது 7 நாட்களுக்கு அனைத்து கடைகளையும் அடைத்து முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து பகுதிகளும் கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here