போலீசாருக்கு உணவளித்த 61 வயதான தன்னார்வலருக்கு கொரோனா – 40 பேருக்கு பரிசோதனை.!

0

கொரோனா நாடெங்கிலும் பரவிய நிலையில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். மேலும் பல காவல் துறையினர் நமக்காக வெயிலில் நின்று இரவு பகல் பாராது உழைக்கின்றனர். இதனால் போலீஸாருக்கு உணவு விநியோகம் செய்த தன்னார்வலர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததாக கூறப்படுவதை அடுத்து அந்த குறிப்பிட்ட அமைப்பிடம் உணவு வாங்கிய போலீஸார் சோதனைக்குட்படுத்தப்படுகிறார்கள். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னார்வலர்கள்

ஊரடங்கால் வேலையின்றி வாடும் ஏழை மக்களுக்கு தன்னார்வல அமைப்புகள் உணவு வழங்கி வருகிறார்கள். அதே போல் ஊரடங்கை மீறுவோரை கண்காணிக்க கொளுத்தும் வெயிலில் போலீஸாரும், தெருக்களை சுத்தப்படுத்தவும் குப்பைகளை சேகரிக்கவும் தூய்மை பணியாளர்களும் களப்பணியாற்றி வருகிறார்கள்.

How police handling coronavirus lockdown in Chennai - News Today ...

நமக்காக போராடும் இவர்களுக்கு உணவு கிடைக்கும் வகையிலும் போலீஸாருக்கும் தன்னார்வல அமைப்புகள் உணவு வழங்குகிறார்கள். அந்த வகையில் கோவை வடமதுரை கோத்தாரி லே அவுட் பகுதிகளை சேர்ந்த 61 வயது தன்னார்வலர் ஒருவர் கடந்த ஒரு வாரமாக துடியலூர் காவல் துறையினருக்கு உணவு விநியோகம் செய்து வந்துள்ளார். இவர்களுடன் இணைந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளையும் செய்து வந்தார்.

கொரோனா உறுதி

இந்த நிலையில் அவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் ஒரு வாரமாக துடியலூர் காவல் துறையினருக்கு உணவு அளித்து வந்துள்ளார். இவர் உணவு அளித்த காவல் நிலையத்தில் உள்ள 40 பேருக்கும் இன்று காலை முதல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

India coronavirus lockdown | Day 1 updates March 25, 2020 - The Hindu

கடந்த மார்ச் 23-ஆம் தேதி டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வந்துள்ள 61 வயது முதியவருக்கு இரு முறை கொரோனா சோதனை நடத்தப்பட்டு நெகட்டிவ் என வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது.

Coimbatore on high alert after warning on Lashkar terrorists ...

இதையடுத்து துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து துடியலூர் காவல் துறையினருக்கு சோதனை நடத்தப்படுகிறது. அது போல் தன்னார்வலர்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சோதனை செய்யப்பட்டது. இதனிடையே இவர் துடியலூர் காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தது தெரியவந்தது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here