இந்தியாவில் மலிவு விலையில் 5ஜி சேவை – முகேஷ் அம்பானி அறிவிப்பு!!

0

5ஜி சேவையின் வருகை பெரிய அளவிலான தொழில்புரட்சியை ஏற்படுத்தும், அதன் முன்னோடியாக ரிலையன்ஸ் ஜிவ் திகழும்.ரிலையன்ஸ் ஜியோ 5ஜி நெட்வொர்க் சேவை உள்நாட்டின் ஹார்டுவேர் மற்றும் தொழில்நுட்ப கூறுகளால் இயக்கப்படும். இந்தியாவில் 5ஜி சேவையில் புதியதொரு புரட்சியை வரும் 2021 ஆம் ஆண்டின் பிற்பாதியில் படைக்க உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

இந்தியா மொபைல் மாநாடு 2020:

இந்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையும், இந்திய செல்போன் நிறுவனங்கள் சங்கமும் இணைந்து இந்தியா மொபைல் மாநாடு 2020-ஐ நடத்துகின்றன. இந்த மாநாடு இன்று முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ‘தற்சார்பு இந்தியா,’ ‘டிஜிட்டல் பங்கேற்புநிலை’ மற்றும் ‘நீடித்த வளர்ச்சி, தொழில்முனைவோர் முயற்சி & புதுமை சிந்தனை படைப்பு’ என்ற தொலைநோக்குத் திட்டங்களுக்காண செயல்பாடுகளை உருவாக்குவது இந்த மாநாட்டின் நோக்கம் என்கிறது மத்திய அரசு.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மாநாட்டில் பேசிய ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது, “5ஜி சேவையின் வருகை பெரிய அளவிலான தொழிற்புரட்சியை ஏற்படுத்தும். அதன் முன்னோடியாக ஜியோ நிறுவனம் திகழும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்ட உலகளவிலான சிறந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 5ஜி சேவையை அதிகரிக்கவும், விரைவுபடுத்துவதற்கும் அதை மலிவு மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்வதற்கும் கொள்கை அளவிலான நடவடிக்கைகள் தேவை. இந்தியாவில் 5ஜி சேவையில் புதியதொரு புரட்சியை வரும் 2021 ஆம் ஆண்டின் பிற்பாதியில் படைக்க உள்ளது. குறிப்பாக, தற்சார்பு இந்தியாவுக்கு ஒரு சான்றாக இது திகழும்” என் கூறினார்.

நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை கோட்டை விட்ட கேப்டன் கோஹ்லி??

இதுகுறித்து மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி அவர்கள் கூறித்தாவது,”உரிய காலத்தில் 5 ஜி தொழில்நுட்ப வசதியைத் தொடங்குவதற்கு நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் எல்லா கிராமங்களிலும் அதிவேக பைபர் ஆப்டிக் தொடர்பு வசதியை ஏற்படுத்தும் திட்டத்தை நாம் அமல் செய்து வருகிறோம்” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here