நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை கோட்டை விட்ட கேப்டன் கோஹ்லி?? ரிவ்யூ-வில் ஏற்பட்ட குழப்பம்!!

0

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டி -20 போட்டி இன்று சிட்னியில் நடைபெற்று முடிந்தது. இதில் ஆஸ்திரேலியா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் பவுலிங்கில் கேப்டன் விராட் கோஹ்லி கவனக்குறைவால் ஒரு முக்கிய விக்கெட்டை இந்திய அணி தவற விட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்றைய போட்டியின் ஆரம்பத்தில் இந்திய அணி டாஸை வென்று முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கிற்கு சென்ற ஆஸி அணியின் தொடக்க வீரரானா மேத்யூ வேட் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரன்களை குவிக்க தொடங்கினார். இந்திய அணியின் பௌலர்கள் சாஹல், வாஷிங்டன் சுந்தர், சாகர் ரன்களை கட்டுப்படுத்த தவறி விட்டனர்.

கேப்டன் விராட் கோஹ்லியின் அதிரடி வீண்!!

இந்நிலையில் ஒரு நாள் தொடரின் அறிமுக வீரரான நடராஜன் 11வது ஓவரில் பந்து வீச தொடங்கினார். ஓவரின் 4 வது பந்தில் எல்பிடபிள்யூ அப்பீலுக்கு சென்றது. சரியாக லைனில் பட்டு ஸ்டெம்பை நோக்கி பந்து சென்றது. அதை வேட் தனது காலால் தடுத்தார். ஆனால் நடுவர் எல்பிடபிள்யூ கொடுக்கவில்லை. இந்நிலையில் கேப்டன் கோஹ்லி உடனடியாக டிஆர்எஸ் கேட்காமல் காலம் தாழ்த்தினார். இந்நிலையில் ரிவ்யூ போட்டப்பிறகு தான் டிஆர்எஸ் கேட்டார். இதனால் நடுவர் அதற்கு அனுமதிக்கவில்லை.

முக்கிய ஆட்டத்தின் போது கோஹ்லியின் இந்த கவனக்குறைவு ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here