‘5ஜி சீன நிறுவனங்களுக்கு அனுமதித்தால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்’ – அமெரிக்கா வெளியுறவுத்துறை!!

0

‘இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு ‘5ஜி’ தொழில்நுட்ப பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்படாதது அந்நாட்டின் இறையாண்மை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்’ என அமெரிக்க வெளியுறவு துறை கூறியுள்ளது.

சீன நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை :

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் 4 ஜியை கடந்து தற்போது 5ஜி யை நோக்கி சென்று கொண்டுள்ளது உலகம். கடந்த வாரம் நடபெற்ற தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சகம் ‘ரிலையன்ஸ் ஜியோ,ஏர்டெல், வோடபோன், ஐடியா எம்.டி.என்.எல்.’ உள்ளிட்ட தொலைதொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியது.

எந்தவொரு சீன நிறுவனத்துக்கும் 5ஜி தொழில்நுட்ப பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்படாததால் அந்நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளன. மேலும் ரிலையன்ஸ் ஜியோ பார்தி ஏர்டெல் வோடபோன் ஐடியா எம்.டி.என்.எல்.’ உள்ளிட்ட நிறுவங்கள் சீன நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை பயன்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு 5ஜி தொழில்நுட்ப பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என்பது அந்நாட்டின் இறையாண்மை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள முடிவாகும். சோதிக்கப்படாத மற்றும் நம்பத்தகாத சீன தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தால் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here